யோகி ராம்சுரத்குமார் மகராஜின் 98ம் ஆண்டு ஜெயந்தி விழா
திருக்கோவிலுார்: பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின், 98ம் ஆண்டு ஜெயந்தி விழா நேற்று துவங்கியது. திருவண்ணாமலையில், பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின், 98ம் ஆண்டு ஜெயந்தியின் முதல் நாள் விழா நேற்று நடந்தது. காலை, 6:30 மணிக்கு, பிரதான் மந்திரில், கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், சுவாமியின் மூலமந்திரம், ஆயுஷ்ய ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. மூலவருக்கு கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்களை, பக்தர்கள் பகிர்ந்து கொண்டனர். மாலை, 4:30 மணிக்கு, சற்குருநாத ஓதுவாரின் தேவாரம், 6:15 மணிக்கு, அனுராதா கிருஷ்ணமூர்த்தியின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. விழாவின் நிறைவு நாளான இன்று காலை, 7:00 மணிக்கு, பிரதான் மந்திரில், சிறப்பு அபிஷேகம், சுவாதி ஹோமம், அர்ச்சனை, பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து, 10:00 மணிக்கு புத்தக வெளியீட்டு விழாவும், 11:00 மணிக்கு பக்தர்களின் பஜனையும் நடக்கிறது.