உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் உண்டியலில் ரூ.10.44 லட்சம்

அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் உண்டியலில் ரூ.10.44 லட்சம்

அழகர்கோவில், அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் 12 இடங்களில் நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இவை மாதந்தோறும் திறந்து எண்ணப்படுகின்றன. பெருமாள் கோயில் மற்றும் சோலைமலை முருகன் கோயில் உண்டியல்கள் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்தது. இதில் பெருமாள் கோயிலில் 3,62,372 ரூபாயும், சோலைமலை முருகன் கோயிலில் 6,82,182ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணும் பணியை நிர்வாக அதிகாரி செல்லதுரை, உதவி அதிகாரி இளையராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !