பரமக்குடி சுந்தரேஸ்வரர் கோயிலில் பைரவருக்கு சம்பக சஷ்டி விழா
                              ADDED :3253 days ago 
                            
                          
                           பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயி லில் பைரவருக்கு 14 ம் ஆண்டு சம்பக சஷ்டி விழா நவ., 29ல் துவங்கியது. அன்றைய தினம் சித்தி விநாயகர் வழிபாடு, அனுக்ஞை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. தினமும் காலை 10 மணிக்கு அபிஷே கம், மாலை 6 மணிக்கு விபூதி காப்பு, பச்சை, சிகப்பு, வெள்ளை சாத்தி அலங்காரத்தில் பைரவர் அருள்பாலித்து வருகிறார். டிச., 5ல் 108 சங்காபிஷேகம், மூலவருக்கு ருத்ரஹோமம், அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.