நெய்யபிஷேக டிக்கெட்டுகள் தனலெட்சுமி வங்கி வினியோகம்
ADDED :3334 days ago
சபரிமலை: சபரிமலை பயணத்தில், பக்தர்களின் முக்கிய வழிபாடு நெய்யபிஷேகம். ஒரு முத்திரை தேங்காயில் எடுத்து வரும் நெய் அபிஷேகம் செய்ய, 10 ரூபாய் கட்டணமாகும். இதற்கான டிக்கெட்டுகள், பம்பை மற்றும் சன்னிதானத்தில் தேவசம்போர்டு டிக்கெட் கவுன்டர்களில் வழங்கப்பட்டு வருவதுடன் அனைத்து தனலெட்சுமி வங்கி கிளைகளிலும் கிடைக்கிறது. இது போல அரவணை, அப்பம் டிக்கெட்டுகளும் இந்த வங்கிகளில் கிடைக்கிறது. ஒரு டின் அரவணை, 80 ரூபாய். ஒரு பாக்கெட் அப்பம், 35 ரூபாய். பக்தர்கள் வங்கி கிளைகளில் இருந்து டிக்கெட் வாங்கி வந்துவிட்டால், சன்னிதானத்தில் இதற்காக சிறப்பு கவுன்டர் செயல்படுகிறது.