ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா: முளைப்பாரி ஊர்வலம்
ADDED :3250 days ago
ராசிபுரம்: ராசிபுரம் ஷீரடி சாய்பாபா கோவில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ராசிபுரம் ஷீரடி சாய்பாபா, சாய் கணபதிக்கு கும்பாபிஷேக விழா, வரும் 5ல் நடக்கிறது. அதற்கு முன்னதாக, கடந்த, 23ல், காவிரி தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, முளைப்பாரி போடப்பட்டது. நேற்று மாலை, 4:30 மணிக்கு, ராசிபுரம் சிவன் கோவிலில் சாய்பாபாவிற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். ஷீரடி சாய் பாபா திருவீதி உலாவாக, மின்சார அலுவலகம் அருகே உள்ள சாய்பாபா பிரார்த்தனை ஸ்தலம் தியான மண்டபத்திற்கு வந்தார். இதில், ஏராளமான பெண்கள், முளைப்பாரி கூடையை சுமந்து வந்தனர்.