பாம்பலம்மன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் பூக்குழி திருவிழா
ADDED :3250 days ago
குளித்தலை: காவல்காரன்பட்டி பாம்பலம்மன் கோவிலில், ஐயப்ப பக்தர்கள் சார்பில், பூக்குழி விழா நடந்தது. குளித்தலை அடுத்த வடசேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட காவல்காரன்பட்டி, பாம்பலம்மன், காளியம்மன், விநாயகர், முருகன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில், ஐயப்பன் பக்தர்கள் சார்பில், ஒன்பதாம் ஆண்டு பூக்குழி விழா நடந்தது. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் விஜயன், குப்பமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், காவல்காரன்பட்டி மற்றும் உப்புகாச்சிப்பட்டியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதல்களை நிறைவேற்றினர். முடிவில், அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.