தீப திருவிழாவில் இன்று விநாயகர் உற்சவ விழா
ADDED :3249 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவை முன்னிட்டு, நேற்று காவல் தெய்வமான பிடாரி அம்மனுக்கு உற்சவ விழா நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று (டிச., 2) விழாவை சிறப்பாக நடத்த அருள்புரிய வேண்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில், முழு முதற் கடவுளான விநாயக பெருமானுக்கு உற்சவ விழா நடக்க உள்ளது. இதை முன்னிட்டு அநுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹகணம் பூஜைகள் நடத்தப்பட்டு, இரவு விநாயகர் மூஷிக வாகனத்தில் வீதி உலா நடக்க உள்ளது.