உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிணிகள் தீர்க்கும் துதிப்பாடல்கள்!

பிணிகள் தீர்க்கும் துதிப்பாடல்கள்!

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்று சொல்வார்கள் பெரியோர்கள். மனப் பிணிகள் மட்டுமின்றி, உடற் பிணிகளாலும் வாடி வருந்தும் அன்பர்கள், அபிராமியம்மை பதிகத்தில் வரும் மணியே மணியின் ஒளியே... எனும் பாடலைப் பாடி அனுதினமும் அம்பிகையை வழிபட்டால், பிணிக்கு மருந்தாகிய உமை அம்மையின் திருவருளால் நோய்கள் நீங்கும்; ஆரோக்கியம் ஸித்திக்கும்.

திருஞானசம்பந்தர் அருளிய கீழ்க்காணும் பதிகமும் நோய்வதானைகளைத் தீர்க்கும்.

சூழதரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டிதிரேன் மிக ஏத்துமின் பாய்புனலும்
போழ்இள வெண்மதியும் அனல் பொங்கரவும் புனைந்த
தாழ்சடையான் பனந்தாள் தாடகை யீச்சரமே

இந்த பதிகத்தைப் பாடி சிவனாரை வழிபட்டால், வலிய வினைகளும் நோய்களும் அவற்றால் உண்டாகும் துன்பங்களும் நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !