ஜெ., மரணம் கச்சதீவு சர்ச் விழா ரத்து
ADDED :3268 days ago
ராமேஸ்வரம்: முதல்வர் ஜெ., மறைவையொட்டி, டிச., 7ல் நடக்கவிருந்த கச்சதீவு அந்தோணியார் சர்ச் ஆர்ச்சிப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கச்சதீவு அந்தோணியார் சர்ச் புதிய கட்டட திறப்புவிழா டிச., 7ல் நடக்க உள்ளதாக இலங்கை அரசு அறிவித்தது. ஜெ., மறைவையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கச்சதீவு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக, ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் என்.ஜே.போஸ் தெரிவித்தார்.