சபரிமலைக்கு கூடுதல் பஸ்கள்
ADDED :3268 days ago
சென்னை: சபரிமலைக்கு, டிச., 15க்கு பின், கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தில் இருந்து, சபரிமலைக்கு, அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர்.
இவர்கள் வசதிக்காக, சென்னை, திருச்சி மற்றும் மதுரையில் இருந்து, சபரிமலைக்கு தினமும், 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வரும், 15ம் தேதி முதல், சபரிமலைக்கு அதிக பக்தர்கள் செல்வர். எனவே, அதற்கேற்ப, கூடுதல் பஸ்களை இயக்கப்பட உள்ளதாக, அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.