லட்சுமிநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3269 days ago
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், லட்சுமிநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
டிச.,9நடந்தது. குமாரபாளையம் அக்ரஹாரத்தில், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைக்குட்பட்ட லட்சுமிநாராயண சுவாமி கோவில் உள்ளது. கோவிலின் புனரமைப்பு பணிகள், கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்து வந்தது. கடந்த, 6 முதல், டிச.,9 வரை யாகசாலை பூஜைகள் நடந்தன. டிச.,9 காலை, 8:00 மணிக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில், முக்கிய பிரமுகர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.