உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐந்து கோவில்களில் கும்பாபிஷேக விழா

ஐந்து கோவில்களில் கும்பாபிஷேக விழா

பவானி: பவானி, குறிச்சி வட்டார கிராம பகுதிகளில், ஐந்து கோவில்களில் டிச.,9 கும்பாபிஷேக விழா நடந்தது. பவானி, முகாசிபுதூர் மஹா கணபதி, வீரமாத்தியம்மன் கோவிலில் டிச.,9 முன்தினம் இரவு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. டிச.,9 காலை, 5:00 மணிக்கு மேல், கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதேபோல் செம்படாபாளையம் கரலாமணியில் புடவைக்காரியம்மன் கோவில், செல்லிகவுண்டனூரில் மதுரைவீரன், சக்தி மாரியம்மன், சக்தி விநாயகர் கோவில் மற்றும் கருப்பமூப்பனூரில் மகா கணபதி, சக்தி மாரியம்மன், கடகடப்பான் கோவிலில் டிச.,9கும்பாபிஷேகம் நடந்தது. விழாக்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பவானி, அம்மாபேட்டை, மீனவர் வீதியில், புதிதாக கட்டப்பட்ட செல்வ விநாயகர் கோவிலில், டிச.,9 காலை, 7:30 மணிக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதி பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !