2 கோவில் உண்டியலில் ரூ.2.86 லட்சம் காணிக்கை
ADDED :3269 days ago
சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தின் கீழ், பல கோவில்கள் செயல்படுகின்றன. இதில் சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலும் அடங்கும். கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த, மூன்று நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை எண்ணும் பணி டிச.,9 முன்தினம் நடந்தது. இதில், 98 ஆயிரத்து, 286 ரூபாய் ரொக்கமாக செலுத்தப்பட்டிருந்தது. இதேபோல் காங்கேயம் சாலையில் உள்ள, மாரியம்மன் கோவில் உண்டியலும் எண்ணப்பட்டது. இதில் ஒரு லட்சத்து, 88 ஆயிரத்து, 133 ரூபாய் காணிக்கை இருந்தது. மேலும் தங்கம் எட்டு கிராம், 62 கிராம் வெள்ளியும் செலுத்தப்பட்டிருந்தது.