தான்தோன்றியம்மன் குண்டம் விழா 14ல் துவக்கம்
ADDED :3269 days ago
கோபி: மொடச்சூரில் பிரசித்தி பெற்ற தான்தோன்றியம்மன் குண்டம் தேர்த்திருவிழா, வரும், 14ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. டிச.,26ல் கொடியேற்றம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நிகழ்ச்சி, 29ல் காலை 7:40 மணிக்கு நடக்கிறது. டிச.,30ல் மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வலம் வருதல், டிச.,31ல் இரவு 10:00 மணிக்கு, புஷ்ப பல்லக்கில் அம்பாள் திருவீதி உலா நடக்கிறது. 2017 ஜன.,1ல் தெப்பத்தேர் உற்சவம், மஞ்சள் நீர் உற்சவம், ஜன.,2ல் இரவு 7:00 மணிக்கு மறுபூஜை, ஜன.,6ல் இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்வசம் நடக்கிறது.