உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கார்த்திகை திருவிழா: இன்று சொக்கப்பனை

பழநி கார்த்திகை திருவிழா: இன்று சொக்கப்பனை

பழநி:பெரிய கார்த்திகையை முன்னிட்டு பழநி மலைக்கோயில் தீப ஸ்தபம்பத்தில் விளக்கேற்றி, சொக்கப்பனை கொளுத்தப் படுவதால் இன்று தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. பழநி மலைக்கோயிலில் டிச.,6ல் கார்த்திகை திருவிழா காப்புகட்டுதலுடன் துவங்கி இன்றுடன் நிறைவுபெறுகிறது. விழாவை முன்னிட்டு தினமும் மாலை சாயரட்சை பூஜையை தொடர்ந்து சண்முகர், வள்ளி,தெய்வானை, சின்னக்குமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் சண்முகார்ச்சனை, யாகசாலை தீபாராதனை நடந்தது. சின்னக்குமராசுவாமி தங்கசப்பரத்தில் எழுந்தருளினார். நேற்று மூலவர் ஞான தண்டாயுதபாணி சன்னதியில் மாலை 5.30 மணி சாயரட்சை பூஜைக்குபின் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று பெரிய கார்த்திகையை முன்னிட்டு மூலவர் சன்னதியில் இருந்து பரணி தீபம் எடுத்துவரப்பட்டு உட்பிரகாரத்தின் 4 மூலைகளிலும் தீபம் ஏற்றி, மாலை 6:00 மணிக்கு மேற்கு வெளிப் பிரகார தீபஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அதன்பின் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. இன்று இரவு 7:00 மணிக்கு நடக்கும் தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல் நாளை முதல் தங்கரதப்புறப்பாடு நடைபெறும் என கோயில்நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !