உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலுார் வீரகாளியம்மன் கோயிலில் பூத்தட்டு திருவிழா

மேலுார் வீரகாளியம்மன் கோயிலில் பூத்தட்டு திருவிழா

மேலுார் : மேலுார் வீரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாக வந்தனர். அதைகொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று பூத்தட்டு திருவிழா நடந்தது. இவ்விழாவில் கீழவளவு, கீழையூர், சருகுவலையபட்டி, வடக்குவலையபட்டி உட்பட ஏராளமான கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவின் முதல் நாள் கோயிலில் இருந்து அம்மன் வீதி உலா நடந்தது. அதைதொடர்ந்து நேற்று பக்தர்கள் பூத்தட்டுக்களை ஏந்தி ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பூக்களை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஊர்வலத்தின் முடிவில் மலர்களால் அலங்கரிங்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். முன்னதாக காலையில் கோ பூஜையும், கோயில் முன்பு கிராமத்து சார்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெண்கள் அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !