புதுச்சேரி லாஸ்பேட்டையில் ஏகதின லட்சார்ச்சனை
ADDED :3249 days ago
புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவசுப்ரமணியசாமி கோவிலில் 10 கால ஏக தின லட்சார்ச்சனை விழா நாளை நடக்கிறது. லாஸ்பேட்டையில் உள்ள சிவசுப்ரமணியசாமி கோவி லில் சிவகாலஞான பைரவர் பிரதிஷ்டையின் 5ம் ஆண்டு நிறைவையொட்டி நாளை 18ம் தேதி காலை சிவகால ஞான பைரவருக்கு, அபிஷேக ஆராதனையும், லட்சார்ச்சனையும் நடக்கிறது. இந்த லட்சார்ச்சனை காலை 8 மணி முதல் இரவு 8.13 மணி வரை, 10 காலம் நடக்கிறது.