காமாட்சியம்மன் கோவில் ஐயப்ப பக்தர்கள் பூஜை
ADDED :3312 days ago
கரூர்: ஐயப்ப பக்தர்கள் சார்பில், கரூர் காமாட்சியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்லும் ஐயப்ப சுவாமிகள், இக்கோவிலில் ஒன்று கூடி ஐயப்ப சுவாமி படத்தை வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். அதேபோல், இந்தாண்டும், ஐயப்ப பக்தர்கள் ஒன்று கூடி ஐயப்ப சுவாமி படத்துக்கு மாலை அணிவித்தும், ஐயப்பன் புகழ்பாடி மகிழ்ந்தனர். பின்னர் மாலை, 6:00 மணியளவில் குத்துவிளக்குப் பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.