உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) கடன் பட்டாலும் கல்யாணம் களைகட்டும் (70/100)

துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) கடன் பட்டாலும் கல்யாணம் களைகட்டும் (70/100)

கலை ஆர்வத்துடன்  செயலாற்றும் துலாம் ராசி அன்பர்களே!

ராசிநாதனான சுக்கிரன் சாதகமாக இருக்கும் சூழ்நிலையில்  புத்தாண்டு பிறக்கிறது. ஆரம்பமே சுப மங்களமாக இருக்கும். குருபகவான்  ஜன.16ல் உங்கள் ராசிக்கு அதிசாரமாக வருகிறார். இது சிறப்பானதல்ல என்றாலும்  அவரது 5,7,9-ம் இடத்துப் பார்வையால் நன்மை உண்டாகும். மார்ச்10 முதல் ஆக.31 வரை குரு வக்ரம் அடைவதால் நற்பலன் குறையும். தற்போது சனிபகவான் உங்கள் ராசிக்கு  2ல் இருக்கிறார். அவரது 10-ம் இடத்துப் பார்வை மூலம் நற்பலன் உண்டாகும்.  ஏப்.10  முதல் ஆக.6 வரை சனி வக்ரம் அடைவதால் நன்மை அளிக்க இயலாது.  டிச.18ல்  தனுசு ராசிக்கு மாறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழிலில் சீரான வளர்ச்சியும் உண்டாகும். ராகு 11-ம் இடமான சிம்மத்தில் இருப்பதால் பெண்களால் நன்மை, பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.  ஜூலை 26ல்  10ம் இடமான கடகத்திற்கு மாறுவதன் மூலம் உடல் உபாதை ஏற்படலாம். கேது தற்போது  5ல் இருப்பதால்  பிள்ளைகளால் பிரச்னை உருவாகலாம். ஜூலை 26ல் கேது 4-ம் இடமான மகரத்திற்கு செல்வதும் சிறப்பானது அல்ல. உடல்நலக்குறைவு ஏற்படலாம். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனைக் காணலாம். இந்த ஆண்டு  குடும்பத் தேவை குறைவின்றி  நிறைவேறும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி நடத்தி மகிழ்வீர்கள். அதற்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். குடும்பத்தில் பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பகவான் பார்வையால் செல்வாக்கு மேம்படும்.  மனதில்  உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  மார்ச் முதல் ஆகஸ்ட் வரை  திடீர் செலவு, அலைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.

தொழில், வியாபாரம்: கூட்டாளிகள் இடையே ஒற்றுமை மேம்படும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். வங்கி நிதியுதவியுடன் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவீர்கள். ஏப்.10 முதல் ஆக.6 வரை திடீர் செலவு, பணவிரயம் ஏற்படலாம். ஆக.6ல்  சனி வக்ர நிவர்த்தி அடைந்த பின் நிலைமை சீராகி  தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பணியாளர்கள்: தன்னம்பிக்கையோடு செயல்பட்டு பணியாளர்கள் வளர்ச்சி காண்பர்.  குரு பகவான் பார்வையால் வேலைப்பளு குறையும். அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர்.  எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். ஆனால் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை பணிச்சுமை இருந்தாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் குறைவின்றி கிடைக்கும். தொழில்ரீதியான பயணம் இனிய அனுபவம் அளிக்கும். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை விடாமுயற்சி தேவைப்படும்.

அரசியல்வாதிகள்: பெண்களின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு துணைநிற்கும். தொண்டர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். விரும்பிய பதவி கிடைக்கப் பெறுவீர்கள்.

மாணவர்கள்: கல்வியில் வளர்ச்சி காணலாம். போட்டியில் பங்கேற்று பரிசு, பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்பை பெறுவர்.  ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.

விவசாயிகள்: ஜூலை மாதம் வரை மானாவாரி பயிர்களில் சிறப்பான வருமானம்  கிடைக்கும். அதன் பின் அதிக செலவு பிடிக்கும் பயிர்களையும், கருப்பு தானிய வகைகளையும் பயிரிடுவதை தவிர்க்கவும். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் கிடைக்கும்.

பெண்கள்:  உங்களின் பங்களிப்பால் குடும்ப வாழ்வு சிறக்கும். கணவரின் அன்பும், ஆதரவும்  கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல வளர்ச்சி அடைவர்.  மார்ச் முதல் ஆகஸ்ட் வரை குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அதன்பின் பிள்ளைகளின் செயல்பாட்டால் பெருமிதம் கொள்வீர்கள்.

செல்ல வேண்டிய கோவில்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதிபெருமாள் கோவில்.

பரிகாரம்: வியாழக்கிழமை குருபகவான், தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனியன்று  சனீஸ்வரருக்கு எள்எண்ணெய் தீபமேற்றுவது நல்லது.  கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழை மாணவர்களின் படிப்புச் செலவுக்கு உதவுங்கள். புற்றுக் கோவிலில் வழிபடுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !