ஒரத்துார் தூய பேதரு ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
விழுப்புரம்: ஒரத்துார் சி.எஸ்.ஐ., துாய பேதரு ஆலயத்தில் ஏழைகள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, வேலுார் பேராயர் மற்றும் தென்வட்டார தலைவர் ஆபிரகாம் ஆசைதம்பி தலைமை தாங்கினார். குருசேகர தலைவர் ஆயர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்து, சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்தார். அதனை தொடர்ந்து இயேசு பிறப்பின் சிறப்பம்சங்கள் குறித்து பேராயர்கள், மக்களுக்கு விளக்கமளித்தனர். இதையடுத்து, ௬௦௦ பேருக்கு இலவசமாக புடவை, வேட்டி, பெட்ஷீட்டும், ௨ ஆயிரத்து ௫௦௦ பேருக்கு உணவு பொட்டலங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தொழிலதிபர் சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் நண்பர்கள் குழு சார்பில், ஒயிலாட்டம், கரகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில், நண்பர்கள் குழு நிர்வாகிகள் சேகர், துரைசாமி, ஜெபதேவக்குமார், விக்டர் ஜெபதுரை, பாபு, ஜான்பீட்டர், பிரகலாதன், சாமிதாஸ், வின்சென்ட், முன்னாள் ஊராட்சி தலைவர் வேலு, வாலிபர் சங்க தலைவர் மனாசேராஜ், ஆரீஸ், பிராங்லின், டேவிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.