ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஐயப்பன் கோவிலில் நடந்த‚ மண்டல பூஜை விழாவில்‚ ஐயப்பன் வாழை மட்டையால் ஆன அம்பலத்தில் அருள்பாலித்தார். திருக்கோவிலுார்‚ கணக்குப்பிள்ளை வீதியில் உள்ள ஐயப்பன் கோவிலில்‚ மண்டலபூஜை இரண்டுநாள் விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு சுவாமிக்கு 108 சங்காபிஷேகம்‚ மாலை 6:00 மணிக்கு ஏராளமான பெண்கள் குத்துவிளக்கேந்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். தொடர்ந்து 7:00 மணிக்கு சுவாமி ஐயப்பன் வாழை மட்டையால் செய்யப்பட்ட அம்பலம் எனும் குடிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் குத்துவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். நேற்று காலை தென்பெண்ணையில் இருந்து தீர்த்தகலசங்கள் புறப்பாடாகியது. 10:30 மணிக்கு கலசபூஜை‚ கணபதி ேஹாமம்‚ சாஸ்தா ேஹாமம்‚ சுவாமிக்கு மகா அபிேஷகம்‚ மாலை 6:00 மணிக்கு மூலவர் ஐயப்பன் சந்தனகாப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.