அறுபதாம் கல்யாணம் அருமையாக செய்ய அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வாங்க!
ADDED :3252 days ago
நாயக்கன்பேட்டை: நாயக்கன்பேட்டை அமிர்த கடேஸ்வரர் கோவிலில், அறுபதாம் கல்யாணம் நிகழ்ச்சிகள் நடத்துவது அதிகரித்து வருகிறது என, அப்பகுதியைச் சேர்ந்த கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் அடுத்த, நாயக்கன்பேட்டை கிராமத்தில், அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 60 வயது நிறைவடைந்தவர்களுக்கு மணிவிழா என அழைக்கப்படும், 60ம் கல்யாணம் அடிக்கடி நடந்து வருவதாக கூறப்படுகிறது. திருக்கடையூருக்கு அடுத்தபடியாக அறுபதாம் கல்யாணங்கள் அதிகமாக நடக்கும் கிராமமாக நாயக்கன்பேட்டை திகழ்ந்து வருகிறது என, கோவில் நிர்வாகம் மற்றும் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.