திருப்புல்லாணியில் டிச., 29 முதல் பகல் பத்து, ராப்பத்து துவக்கம்
ADDED :3255 days ago
கீழக்கரை, திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற டிச., 29 முதல் பகல் பத்து, ராப்பத்து பூஜைகள் நடக்க உள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு பகல் பத்து உற்சவ காலங்களில் காலை 10 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், சாற்று முறை, கோஷ்டி பாராயணம், திருமொழி, நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல்கள் பாடப்படும். ஜன., 8 அன்று வைகுண்ட ஏகாதசியில் காலை 10 மணிக்கு சயனத்திருக்கோலத்திலும், மாலை 7 மணிக்கு பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பும், தொடர்ந்து ஜன., 17 வரை மாலை 6 மணிக்கு ராப்பத்து சிறப்பு பூஜைகளுடன் நடக்கும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.