திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் அய்யப்பன் தேரில் வீதிஉலா
ADDED :3255 days ago
திருவள்ளூர் : திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், 46ம் ஆண்டு, அய்யப்ப பூஜை மற்றும் விளக்கு பூஜை நடந்தது. திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், அய்யப்பன் சன்னிதி உள்ளது. இங்கு 46ம் ஆண்டு, அய்யப்ப பூஜை மற்றும் விளக்கு பூஜை, 21ம் தேதி, கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை, அய்யப்பன் சன்னிதியில் விளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், அய்யப்பன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெருவில் பக்தர்கள் விளக்கு ஏந்தி அய்யப்பனை வரவேற்பு, பூஜை செய்து வழிபட்டனர்.