சபரிமலை பாதைகளில் விபத்தை குறைக்கும் வகையில் டிரைவருக்கு ஒரு கப் காபி
சபரிமலை: சபரிமலை பாதைகளில் விபத்தை குறைக்கும் வகையில் ’டிரைவருக்கு ஒரு கப் காபி’ என்ற திட்டத்தை பத்தணந்திட்டை மாவட்ட போலீஸ் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.சபரிமலை பாதைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க பத்தணந்திட்டை மாவட்ட எஸ்.பி. ஹரிசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடுமையான குளிரடிக்கும் பாதையில் வாகனங்கள் இயக்கப்படுவதால் டிரைவர்களுக்கு அசதி ஏற்பட்டு விபத்து ஏற்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து டிரைவர்களை உஷார் படுத்தும் வகையில் அவர்களுக்கு சூடாக ஒரு கப் காபி வழங்க முடிவு செய்யப்பட்டது.இதற்கான செலவை நியூ இந்தியா இன்ஷூரன்ஸ் இந்தியா கம்பெனி வழங்கியது. காபி தயாரிக்கும் பொறுப்பை குடும்பஸ்ரீ என்ற பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் ஏற்றுள்ளனர். சாலக்கயத்தில் வாகன டிரைவர்களுக்கு காபி வழங்கப்படுகிறது. இதனை பம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் வித்யாதரன் தொடங்கி வைததார். டிரைவர்கள் மத்தியில் இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.