உண்டியல்கள் திறப்பு ரூ.2.64 லட்சம் காணிக்கை
அனுப்பர்பாளையம்: பெருமாநல்லூரில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் கோவில், உத்தமலிங்கேஸ்வரர் கோவில், ஆதிகேசவ பெருமாள் கோவில் உண்டியல் காணிக்கையாக, இரண்டு லட்சத்து, 64 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத்துறை அவிநாசி ஆய்வாளர் பொன்னுதுரை, செயல் அலுவலர் சங்கர சுந்தரேசன் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டது. மகா விஷ்ணு சேவா சங்க உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கொண்டத்து காளியம்மன் கோவில் உண்டியலில், ஒரு லட்சத்து, 53 ஆயிரத்து, 820 ரூபாய், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதில் பழைய, 500 ரூபாய் நோட்டு 69ம்; ஆயிரம் ரூபாயில், 41 நோட்டுகளும் இருந்தன.உத்தமலிங்கேஸ்வரர் கோவில் உண்டியலில், 80 ஆயிரத்து, 157 ரூபாய்; ஆதிகேசவ பெருமாள் கோவில் உண்டியலில், 30 ஆயிரத்து, 92 ரூபாயும் சேர்த்து, மொத்தம், இரண்டு லட்சத்து, 64 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.