உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்மஸ் விழா: பாம்பன் சர்ச்சில் பனிக்குடில்

கிறிஸ்மஸ் விழா: பாம்பன் சர்ச்சில் பனிக்குடில்

ராமேஸ்வரம்: கிறிஸ்மஸ் விழா யொட்டி, ராமேஸ்வரம் அருகே பாம்பன் சர்ச்சில் இயேசு பிறப்பை நினைவு கூறும் விதமாக தத்ரூபமாக பனிக்குடில் அமைத்துள்ளனர். இயேசு நாதர் பிறந்த தினத்தை கிறிஸ்மஸ் விழாவாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். ராமேஸ்வரம் அருகே பாம்பனில் உள்ள ஆரோக்கிய அன்னை சர்ச்சில், கிறிஸ்மஸ் விழா கொண்டாடும் விதமாக, பனி பொழிவு நாளில் இயேசு பிறப்பை நினைவு வகையில், கடந்த இரு தினங்களாக சர்ச்க்குள் ரூபாய் 1.50 லட்சம் செலவில் பனிக்குடில் வீட்டை தத்ரூபமாக, சர்ச்சின் இறைமக்கள் உருவாக்கினர். இதனை ஏராளமான இறைமக்கள் நேரில் கண்டு வணங்கினர். நள்ளிரவு சர்ச்சில் நடக்கும் கிறிஸ்மஸ் விழா திருப்பலி பூஜையில், இறைமக்கள் பலர் பங்கேற்பார்கள் என இறைமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பாம்பன் சர்ச் பாதிரியார் பிரிட்டோ ஜெயபாலன் கூறுகையில்: கடவுள் மனித குலத்தில் ஞான குழந்தையாக பிறந்த நாள் தான் (டிச.25 அதிகாலை), இயேசுபிரான் தன்னை மனிதராக அவதரித்த இந்நாள் வரலாற்று சிறப்புமிக்கது. ராமேஸ்வரம் தீவு இறைமக்கள் கிறிஸ்மஸ் விழாவை, இனிப்பு வழங்கி கொண்டாடுவார்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !