வேளாங்கண்ணி தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி
ADDED :3254 days ago
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில், கீழ்திசை நாடுகளின் லூர்து என்றழைக்கப்படும், ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பாடல் திருப்பலி நடந்தது. நேற்று முன் தினம் இரவு, 11:45 மணிக்கு துவங்கிய சிறப்பு பாடல் திருப்பலி, அதிகாலை, 1:30 மணி வரை நடந்தது.தேவாலய அதிபர் பிரபாகர் தலைமையில், 25க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலியில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அறிவிப்பு, நற்கருணை ஆசிர், உலக அமைதிக்கான சிறப்பு ஜெபம் ஆகியவை நடந்தன. இதில், பல ஆயிரம் பேர் பங்கேற்றனர்.