திருப்பூர் கோவில்களில் உழவாரப்பணி
ADDED :3254 days ago
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப் பெருமாள் கோவில்களில் நேற்று உழவார பணி நடந்தது. திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் தூய்மை பணி நடந்தது. கோவில் பிரகாரம், சன்னதி, கொடிமரம் உள்ளிட்ட கோவில் முழுவதும் இருந்த குப்பை, எண்ணெய் கறை அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. பூஜை பொருட்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டது. கோவில் முழுவதும் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யப்பட்டது. உழவார பணியில், சிவனடியார்கள் பங்கேற்றனர். இதேபோல், வீரராகவப் பெருமாள் கோவிலில், சேக்கிழார் புனித பேரவை சார்பில், கோவில் வளாக பகுதி, சுற்றுப்பிரகாரம், வெளிப்பிரகாரம் முழுவதும் தண்ணீர் பாய்ச்சி, தூய்மைப்படுத்தப்பட்டது. பேரவை நிறுவன தலைவர் முத்து நடராஜன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.