விருதுநகரில் ராதை மாதவ திருக்கல்யாணம்
ADDED :3254 days ago
விருதுநகர்: விருதுநகர் ஏ.வி.கே.சி., திருமண மண்டபத்தில் 66 வது ஆண்டு ஸ்ரீ ராதை மாதவ திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. பின் இரவு ஏழு மணிக்கு திவ்யநாம சங்கீர்த்தனம், தீபப்பிரதஷ்ணம், டோலோஸ்தவம் நடைபெற்றது. நேற்றைய விழா காலை 7 மணிக்கு உஞ்சவ்ருத்தியுடன் துவங்கியது. அதை தொடர்ந்து காலை 10 மணிக்கு சீர் கொண்டு வருதல் நிகழ்ச்சியும் , கல்யாண அஷ்டபதியுடன் ராதா மாதவ கல்யாணமும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.