உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்

கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்

திருப்பூர்: திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேவாலயங்களில், கிறிஸ்துமஸ் விழா, நேற்று கொண்டாடப்பட்டது; நள்ளிரவு திருப்பலி பூஜைகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனை, வழிபாடு நடத்தப்பட்டது. திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள புனித  கேத்ரீனாள் ஆலயம், அவிநாசி ரோடு, சி.எஸ்.ஐ., துõய பவுல் ஆலயம், ஆஷர் நகரில், எஸ்.ஏ.பி., பின்புறம் உள்ள  சி.எஸ்.ஐ., துõய லுõக்கா ஆலயம், கோர்ட் வீதியில் உள்ள டி.இ.எல்.சி., அருள்நாதர் ஆலயம், நல்லுõர் சி.எஸ்.ஐ., ஆலயம், சாமளா புரத்தை அடுத்துள்ள பள்ளபாளையம், புனித ஆரோபன அன்னை ஆலயம் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் இரவு, 10:00  மணி முதல், சிறப்பு வழிபாடு, திருப்பலி மற்றும் ஆராதனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. காலையில் நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டங்களிலும், கிறிஸ்தவ மக்கள் திரளாக பங்கேற்று, ஏசுவை வழிபட்டனர். நாட்டில் அமைதியும்,  அன்பும் நிலவ வேண்டும்; மக்கள் அனைவரும் ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என, பிரார்த்தனை செய்யப்பட்டது.  கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையில், வண்ண அலங்கார விளக்குகளில், குடில் அமைக்கப்பட்டிருந்தது. தேவாலாயங்களும், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அழகாக காட்சியளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !