சென்னையில் தர்ம சாஸ்தா திருக்கல்யாண மகோற்சவம்
சென்னை: சென்னையில், பூர்ணா புஷ்களாம்பாள் சமேத ஸ்ரீ தர்ம சாஸ்தா திருக்கல்யாண மகோற்சவம், இன்று நடக்க உள்ளது. தி.நகர், தெற்கு போக் சாலை, காந்திமதி கல்யாண மண்டபத்தில், பூர்ணா புஷ்களாம்பாள் சமேத ஸ்ரீ தர்ம சாஸ்தா திருக்கல்யாண மகோற்சவம், இன்று நடக்க உள்ளது. இதையொட்டி, காலை ௭:௦௦ மணிக்கு, சம்ப்ரதாய உஞ்சவிருத்தி நிகழ உள்ளது. தொடர்ந்து, ௭:௩௦ மணி முதல், மதியம் ௧:௩௦ வரை, தோடக மங்களம், திவ்யநாமம், தீபப்ரதக்ஷணம், சாஸ்தா பரிவார, சாஸ்தா வரவு பாடல்கள், மாலை மாற்றுதல் ஊஞ்சல், முத்துகுத்துதல் போன்ற வைபவங்கள் நிகழ உள்ளன. இறுதியில், திருக்கல்யாணம் நடைபெறும். காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான பாகவதர், பஜனாம்ருத ஸாகரம் வி.எஸ்.சிவசுப்ரமண்ய பாகவதர் முன்னிலையில், விமரிசையாக திருக்கல்யாணம் நடக்க உள்ளது. நலங்கு, ஆஞ்சநேயர் உற்சவத்தை தொடர்ந்து, திருக்கல்யாண பிரசாத விருந்து வழங்கப்படும்.