திருப்பூரில் சபரி சாஸ்தா குழு அன்னதானம்
ADDED :3254 days ago
திருப்பூர்: திருப்பூரில், சபரி சாஸ்தா குழு சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. திருப்பூர், ஆர்.எஸ்., புரத்தில், சபரி சாஸ்தா குழு சார்பில், அன்னதான விழா, 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு, ஸ்ரீசெல்வவிநாயகர் கோவிலில், 24ல் விழா துவங்கியது. காலை, 4:30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. அன்றைய தினம் மாலை, திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு துவங்கிய கூட்டு பஜனை, நள்ளிரவு வரை நீடித்தது. அப்பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று, தர்மசாஸ்தாவை வழிபட்டனர். நேற்று காலை, மகேஷ்வர பூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு செண்டை மேளம் முழங்க துவங்கிய, சுவாமி ஊர்வலம் கணேசபுரம், கருணாகரபுரி மூன்று வீதிகள், சஞ்சய்நகரில் திருவீதியுலாவாக சென்றது.