ராமேஸ்வரம் கோயில் நந்தவனத்தில் ருத்ராட்ச மரம்
ADDED :3254 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அருகில் உள்ள நந்தவனத்தில் அபூர்வ வகையான ருத்ராட்ச மரக்கன்றுகள் நடப்பட்டது. ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற என்.எஸ்.எஸ்., திட்ட சிறப்பு முகாம் நேற்று துவங்கியது. இதையொட்டி ராமநாதசுவாமி கோயில் வடக்கு நந்தவனம் சுத்தம் செய்யப்பட்டு அபூர்வ வகையான ருத்ராட்ச மரக்கன்றுகள் நடப்பட்டது. இதை கோயில் இணை ஆணையர் செல்வராஜ் துவக்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டனர். கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஷ்கார் கமலநாதன், அரசு பள்ளி ஆசிரியர் மதியழகன், என்.எஸ்.எஸ்., திட்ட ஆசிரியர் ஜெயகாந்தன், ஆசிரியர்கள் பழனிச்சாமி, தினகரன் உள்பட மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.