உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கல்பட்டில் ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கல்யாணம் சிறப்பு

செங்கல்பட்டில் ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கல்யாணம் சிறப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், ஸ்ரீ தர்ம சாஸ்தா திருக்கல்யாணம் நேற்று, சிறப்பாக நடைபெற்றது. செங்கல்பட்டு, ராதே கிருஷ்ணா பஜனை மண்டலி சார்பில், பூர்ணா, புஷ்களா சமேத ஸ்ரீ தர்ம சாஸ்தா திருக்கல்யாணம், 27 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விழா, செங்கல்பட்டில் தனியார் திருமண மண்டபத்தில், நேற்று, நடைபெற்றது. காலையில், சிறப்பு அபிேஷகம் மற்றும் பஜனை, சொற்பொழிவுகள் நடந்தன. அதை தொடர்ந்து, பூர்ணா, புஷ்களா சமேத ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !