உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.69 லட்சம்

பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.69 லட்சம்

ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம், 4.69 லட்சம் ரூபாய் இருந்தது. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், சிவபெருமான் உருவ ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு, விடுமுறை நாட்கள் மற்றும் பிரதோஷ நாட்களில் அதிகளவு பக்தர்கள் குடும்பத்துடன் சென்று சுவாமியை வழிபடுவர். இக்கோவில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்த, சில இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டன. இந்த உண்டியலில் உள்ள பணம் எண்ணும் பணி நடந்தது. சித்துார் கோவில் அறங்காவலர் துறை அதிகாரி லதா முன்னிலையில், கோவில் மேலாளர் வெங்கடமுனி தலைமையில் ஊழியர்கள், மாணவர்கள், பக்தர்கள் ஆகியோர் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில், நான்கு லட்சத்து, 69 ஆயிரத்து, 966 ரூபாய் இருந்தது. இது, 60 நாட்களாக பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியது என, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !