ராமநாதபுரம் ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை
ராமநாதபுரம்:சபரிமலை மண்டல பூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது. ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் ஐயப்பன் கோயிலில் டிச., 25ல் யாக பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 5:00 மணிக்கு கோ பூஜை, சூரிய பூஜை, 2ம் யாக பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. இதையடுத்து சுவாமிக்கு மண்டலபூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
* பேராக்கண்மாய் ஐயப்பன் கோயிலில் டிச., 25ல் முதல் யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை 10:20 மணிக்கு மண்டல பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:30 மணிக்கு ஊஞ்சல் சேவையை தொடர்ந்து திருவிளக்கு பூஜை, பஜனை நடந்தது.
* மண்டபம் ஐயப்பன் கோயிலில் நேற்று காலை 7:00 மணிக்கு சிறப்பு பூஜையுடன் மண்டல பூஜை துவங்கியது. காலை 11:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு ஐயப்பன் ரத ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்தனர். * மண்டபம் முகாம், குஞ்சார்வலசை, உச்சிப்புளி, தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில்களில் நடந்த மண்டல பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
* திருவாடானை, சின்னக்கீரமங்கலம், தொண்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டலபூஜை நடந்தது. ஐயப்பனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மூலவர் ஐயப்பன் புலி வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
* முதுகுளத்துார் ஐய்யப்ப சுவாமி கோயிலில் 46 ஆம் ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு 1008 விளக்கு பூஜை நடந்தது. முன்ன தாக சுவாமிக்கு அபிஷே கம், அலங்காரம், தீபாரா தனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிச னம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை கோலாகலமாக நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம் நடந்தது. காலை 8:00 மணிக்கு முத்துநாச்சியம்மன் கோயிலில் இருந்து ஐயப்ப பக்தர்கள் பேட்டை துள்ளி வந்தனர். தொடர்ந்து ஐயப்ப சுவாமிக்கு 18 வகையான மகா அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குருசாமி மோகன், வல்லபை ஐயப்பா சேவா நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.