உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி: பள்ளி, கல்லுாரி விடுமுறை, ஆங்கில புத்தாண்டு விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால், நேற்று, இரண்டரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிப்பர்.

இந்நிலையில்,கடந்த , 23ம் தேதி முதல், வரும் ஜன., 2ம் தேதி வரை , கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு முடிந்ததையொட்டி, பள்ளி, கல்லுரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதுதவிர, தற்போது மார்கழி மாதம் என்பதால், திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வழக்கத்திற்கு மாறாக நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று, செவ்வாய்க்கிழமை முருகப்­பெருமானுக்கு உகந்த நாள் என்பதால் அதிகளவில் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். நேற்று மட்டும், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொதுவழியில், இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மார்கழி மாதத்தையொட்டி, மூலவருக்கு அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்­காரம்
மற்றும் தீபாராதனை நடந்தது. சண்முகபெருமானுக்கு வைரகிரீடம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வரும், 31ம் தேதி திருப்படித்திருவிழாவும், ஜன.1ம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !