சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்பசுவாமி கோயிலில் மண்டல பூஜை விழா
ADDED :3255 days ago
ஆண்டிபட்டி : சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்பசுவாமி கோயில் மண்டல உற்சவ விழா, 49 அடி உயர காளியம்மனுக்கு பூச்சொறிதல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் ஐயப்பன் சுவாமி, குருபகவான் சன்னதி, அம்மன் சன்னதிகளில் வேள்வி பூஜை நடத்தப்பட்டு, 49 அடி உயர அம்மன் சிலைக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் நடந்த படி பூஜையில் ஐயப்ப பக்தர்கள் சரண கோஷமிட்டு வழிபாடு நடத்தினர். ஐயப்பசுவாமி கோயில் வளாகத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, மெயின் ரோடு வழியாக சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி சென்று பின்னர் கோயில் வந்தடைந்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை முத்துவன்னியன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.