உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா 11ம் தேதி உள்ளூர் விடுமுறை

சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா 11ம் தேதி உள்ளூர் விடுமுறை

கடலுார்: சிதம்பரத்தில் நடைபெறவுள்ள ஆருத்ரா தரிசன விழாவையொட்டி வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: சிதம்பரம் அரூத்ரா  தரிசன விழா வரும் 11ம் தேதி நடக்கிறது. அதையொட்டி கடலுார் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான 21ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் 11ம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும், பொது முக்கியத்துவம் வாய்ந்த, அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !