துடியலூரில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED :3253 days ago
பெ.நா.பாளையம்: துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அனுமன் ஜெயந்தியையொட்டி, துடியலுாரில் உள்ள ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர், வெற்றிலை மாலை, 1008 வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை, 6:00 மணிக்கு அலங்கார பூஜை, மகா தீபாராதனை, காலை, 7:00 மணி முதல் அன்னதானம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு அன்னுார் அச்சம்பாளையம் சண்முகம் குழுவினரின் ஸ்ரீராம நாம சங்கீர்த்தனம், இரவு, 8:00 மணிக்கு சிறப்பு வாணவேடிக்கை ஆகியன நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதேபோல், தொப்பம்பட்டி அருகே உள்ள ஜெங்கமநாயக்கன்பாளையம் நவாம்ஸ ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் ராஜமாருதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.