உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழைமாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

ஏழைமாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

காரைக்கால்: காரைக்கால் ஏழைமாரியம்மன் கோவிலில், அன்னதான உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள ஏழை மாரியம்மன் கோவிலில், அன்னதான காணிக்கை உண்டியல், சில ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. மேலும், மத்திய அரசு ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால், நேற்று கோவிலில் உள்ள அன்னதான உண்டியல், நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் முன்னிலையில் திறக்கப்பட்டு,காணிக்கை எண்ணும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !