தேவிபட்டினம் நவபாஷாணத்தில் நீர் மட்டம் உயர்வு: பக்தர்கள் அவதி
ADDED :3252 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணம் கடலில் நீர் மட்டம் உயர்ந்து உள்ளதால் நவக்கிரகங்களை சுற்றிவந்து வழிபட பக்தர்கள் அவதிப்படுகின்றனர். தேவிபட்டினம் நவபாஷாணத்தில் தோஷ நிவர்த்தி, பரிகார பூஜை, தர்ப்பணம் செய்வதற்காகவும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து வருகிறது. இவர்கள் பெரும்பாலும் கடலுக்குள் இறங்கி நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபடுவது வழக்கம். நவபாஷாண கடல் நீர் மட்டம் அதிகாலை முதல் பகல் 11:00 மணி வரை குறைவாக இருக்கும். பின்னர் படிப்படியாக அதிகரிக்கும். வழக்கத்திற்கு மாறாக நேற்று அதிகாலை முதலே கடல் நீர் மட்டம் அதிகமாக இருந்தது. இதனால் கடலுக்குள் இறங்கி நவக்கிரகங்களை சுற்றிவந்து வழிபட முடியாத நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டது.