உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட ஏகாதசி விழா பரமக்குடியில் துவக்கம்

வைகுண்ட ஏகாதசி விழா பரமக்குடியில் துவக்கம்

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜன., 8ல் பரமபதவாசல் திறக்கப்பட உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து, ராப்பத்து உற்சவம் நடப்பது வழக்கம். பகல்பத்து உற்சவம் நேற்று துவங்கியது. காலை 10:00 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட பெருமாள் சங்கு, சக்கரம் ஏந்திய நிலையில் தங்க கிரீடம், லெட்சுமி பதக்கத்துடன் புறப்பாடாகி ஏகாதசி மண்டபத்திற்கு எழுந்தருளினார். ஜன., 7 மாலை 5:00 மணிக்கு மோகினி அவதாரத்தில் பெருமாள் வீதியுலா வருகிறார். 8ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் பெருமாள் பரமபதவாசலை கடந்து செல்கிறார். தொடர்ந்து ஜன., 17ம் தேதி வரை ராப்பத்து விழா நடக்கிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் பெருமாள் முன்பு பெரியாழ்வார், நம்மாழ்வார், பேயாழ்வார் ஆகிய 12 ஆழ்வார்கள் அருளிய தமிழ் மறைகளான நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் வாசிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !