ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் 1008 நெய் தீப வழிபாடு
ADDED :3253 days ago
புதுச்சேரி: புத்தாண்டையொட்டி, முத்தியால்பேட்டை தென்கலை ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில், வரும் 1ம் தேதி, 1008 நெய் தீப வழிபாடு நடக்கிறது. புதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில், 33ம் ஆண்டு ஸகஸ்ர (1008) நெய் தீபம், வரும் 1ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஏற்றப்படுகிறது. அதனை தொடர்ந்து 6:30 மணிக்கு ஸகஸ்ரநாம அரச்சனை நடக்கிறது. புத்தாண்டு தினத்தையொட்டி நடக்கும் இந்த வழிபாட்டில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம். இக்கோவில் ராஜகோபுரம் மற்றும் விமானங்கள், பெருமாள் தாயார், ரங்கநாதர், நரசிம்மர், ஆஞ்சநேயர் ஆகிய சந்நதிகள் புதிதாக நிர்மானிக்கப்பட்டு சம்ரோக்ஷணம் நடைபெற்ற பிறகு, முதல் முறையாக ஸகஸ்ர தீபம் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.