அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை
ADDED :3253 days ago
அழகர்கோவில், அழகர்கோவில் மற்றும் அதன் துணை கோயில்களில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. சுந்தரராஜ பெருமாள் கோயிலில் 5,10,651 ரூபாய், தங்கம் 108 கிராம், வெள்ளி 122 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். சோலைமலை முருகன் கோயிலில் 3,25,929 ரூபாய், தங்கம் 4 கிராம், வெள்ளி 434 கிராமும், தல்லாகுளம் பெருமாள் கோயிலில் 3,78,161 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. நிர்வாக அதிகாரி செல்லதுரை, உதவி ஆணையர் இளையராஜா முன்னிலையில் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.