அம்மன் கோவில்பதியில் இன்று தேரோட்ட விழா
ADDED :3253 days ago
கோபி: கோபி தாலுகா, கொளப்பலூர் அம்மன் கோவில்பதியில், பச்சைநாயகி அம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழா, கடந்த, 14ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று தீ மிதி விழா வெகு விமர்சையாக நடந்தது. இன்று மதியம், 2:00 மணிக்கு, தேரோட்டம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு வண்டித்தாரை நிகழ்வு நடக்கிறது. நாளை (31ம் தேதி) புஷ்ப பல்லக்கு மெரவணை நடக்கிறது. மறுநாள் (ஜன.,1ம் தேதி) மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. தேரோட்டத்தில் கோவில் அறங்காவலர் புவனேஸ்வரன் மற்றும் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.