சென்னிமலை, கோபியில் உண்டியல்கள் திறப்பு
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் உண்டியலில், மூன்று லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்தது. சென்னிமலை முருகன் கோவில் உண்டியல், கடந்த, 14ல் திறக்கப்பட்டது. ரூபாய் நோட்டு பிரச்னையால், 14 நாட்களில், நேற்று முன்தினம் மாலை மீண்டும் திறக்கப்பட்டது. இதில், நிரந்தர உண்டியல்கள் ஏழில், இரண்டு லட்சத்து, 97 ஆயிரத்து, 835 ரூபாய் இருந்தது. திருப்பணி உண்டியலில், 2,971 ரூபாய் இருந்தது. மொத்தம், மூன்று லட்சத்து, 806 ரூபாய் கிடைத்தது. மருதமலை கோவில் துணை ஆணையர் பழனிக்குமார், தக்கார் முருகையா, ஆய்வாளர் ஜெயமணி, கோவில் செயல் அலுவலர் அருள்குமார் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
* இதேபோல் கோபி பாரியூர் அம்மன் கோவில், பச்சமலை முருகன் கோவில் உண்டியல்களும் நேற்று திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன. பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், ?? உண்டியல்கள் உள்ளன. இவற்றில், தங்கம் 10.500 கிராம், வெள்ளி ஆறு கிராம், 11 ஆஸ்திரேலியா டாலர் மற்றும் ரொக்கப்பணமாக, 1.79 லட்சம் ரூபாய் இருந்தது. பச்சமலை முருகன் கோவிலில் ஆறு உண்டியல்கள் உள்ளன. இவற்றில் மொத்தம், 1.54 லட்சம் ரூபாய் இருந்தது. இரு கோவில்களிலும் சேர்த்து கிடைத்த, 3.34 லட்சம் ரூபாய், கோபி கார்ப்பரேசன் வங்கியில் செலுத்தப்பட்டது.