உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளிப்பட்டி பெருமாள் கோவில் ஜன., 8ல் சொர்க்கவாசல் திறப்பு

காளிப்பட்டி பெருமாள் கோவில் ஜன., 8ல் சொர்க்கவாசல் திறப்பு

மல்லசமுத்திரம்: காளிப்பட்டி, சென்றாய பெருமாள் கோவிலில், வரும், 8ல், சொர்க்க வாசல் திறப்புவிழா நடக்கிறது. திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டியில் சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், வைகுண்ட ஏகாதசி அன்று, சொர்க்கவாசல் திறப்பது வழக்கம். அதன்படி, வரும் ஜன., 7ல், மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம், மறுநாள் (ஜன., 8) அதிகாலை, 4:30 மணியளவில், சிறப்பு பூஜை மற்றும் திருக்கொடி ஏற்றுதல் நடக்கிறது. காலை, 5:30 மணியளவில், சுவாமி சொர்க்க வாசல் வழியாக வரும் வைபோகம், தொடர்ந்து, சிறப்பு அன்னதானம் நடக்க உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !