உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீராதா மாதவ திருக்கல்யாண உற்சவம் இன்று துவக்கம்

ஸ்ரீராதா மாதவ திருக்கல்யாண உற்சவம் இன்று துவக்கம்

ஏத்தாப்பூர்: ஏத்தாப்பூர், ஸ்ரீராமர் பஜனை மடம் சார்பில், 45வது ஆண்டு, ஸ்ரீராதா மாதவ திருக்கல்யாண உற்சவம் இன்று துவங்குகிறது. காலை, 6:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம் நடக்கிறது. நாளை காலை, 6:00 மணியளவில், விஷ்ணு சஹஸ்ர நாம அர்ச்சனை, 10:00 மணிக்கு அஷ்டபதி பஜனை, மாலை, 5:00 மணிக்கு, ஆற்றோரம் பிள்ளையார் கோவிலில் இருந்து வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க, மாப்பிளை அழைப்பு நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, கணேஷ் பாகவதர் குழுவினரின் சிறப்பு பஜனை நடக்கிறது. ஜன., 1 காலை, 10:00 மணிக்கு, ராதா மாதவ திருக்கல்யாண உற்சவம், மாலை, 6:00 மணிக்கு, உற்சவமூர்த்தி திருவீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !